இதய வீக்கத்தால் சீரியஸான 2 மாதக் குழந்தை.. 2.45 மணி நேரத்தில் தஞ்சை- கோவை பயணம் செய்த ஆம்புலன்ஸ்!




தஞ்சாவூர்: இருதய சிகிச்சைக்காக 2 மாத குழந்தையை தஞ்சாவூரிலிருந்து கோவைக்கு 2.45 மணி நேரத்தில் குழந்தையை ஆம்புலன்சில் அழைத்துச் சென்ற ஓட்டுநருக்கு தமிழகம் முழுவதிலுமிருந்து பாராட்டுகள் தெரிவிக்கப்படுகிறது.


தஞ்சை டூ கோவை.. ஜெட் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ்.. குழந்தையை காப்பாற்றிய ஓட்டுநர்..!
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ரோடு ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் ஜீவா - லெட்சுமி தம்பதியருக்கு ஆரூரன் என்ற இரண்டு மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு கடந்த பத்து தினங்களுக்கு முன் உடல் சுகவீனம் ஏற்பட்டதை அடுத்து இராசா மிராசுதார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.


அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் இருதயம் வீங்கி வருகிறது என கூறினர். இதையடுத்து தஞ்சாவூர் வ.உ.சி. நகரில் உள்ள ஆர்.கே. என்ற தனியார் மருத்துவமனையில் காட்டியபோது, குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

அதற்கான சிறப்பு மருத்துவர் கோவையில் தான் உள்ளார். அங்குள்ள ஜிகேஎன்எம் என்ற தனியார் மருத்துவமனையில்தான் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என கூறினர். ஆனால் குழந்தையின் உடல் தொடர்ந்து சுகவீனம் அடைவதால், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் விரைவாக கொண்டு செல்ல வேண்டும்.

இல்லையென்றால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து நேரிடும் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து குழந்தையை ஆம்புலன்ஸில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. தஞ்சாவூரிலிருந்து கோவைக்கு செல்ல குறைந்தபட்சம் 5.30 மணி நேரம் பிடிக்கும். எனவே இதற்கு சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியது.

இதையடுத்து தமிழ்நாடு ஆல் டிரைவர்ஸ் அசோஷியேசன் மூலம் தஞ்சாவூரிலிருந்து கோவை செல்லும் வழியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையடுத்து நேற்று காலை 5.35 மணிக்கு தஞ்சாவூர் கரந்தையைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பார்த்தசாரதி குழந்தை, தாய் லெட்சுமி மற்றும் உறவினர்கள், செவிலியர் ஒருவருடன் ஆம்புலன்ஸை ஓட்டினார்.
            காலை 8.20 மணிக்கு 265 கி.மீட்டர் தூரத்தை 2.45 மணி நேரத்தில் கடந்து குழந்தையை பத்திரமாக கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் கோவையில் உள்ள தமிழ்நாடு ஆல் டிரைவர்ஸ் அசோஷியேசன் சார்பில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பார்த்தசாரதியை பாராட்டினர்.

        இதுகுறித்து பார்த்தசாரதி கூறியதாவது: நான் 8 ஆண்டுகளாக ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறேன், தஞ்சாவூரிலிருந்து கோவைக்கு செல்ல சுமார் 5.30 மணி நேரம் பிடிக்கும். நான் ஏற்கெனவே இரு மாதங்களுக்கு முன்பு அதே மருத்துவமனைக்கு ஒரு குழந்தையை அழைத்து 5 மணி நேரத்தில் கொண்டு சென்றேன். தற்போது நான் 2.45 மணி நேரத்தில் சென்றுள்ளேன்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments