சுவர் இடிந்து பலியான சிறுமி குடும்பத்திற்கு திமுக 2 லட்சம் நிதியுதவி
மழையால் சுவர் இடிந்து பலியான சிறுமி சத்யஸ்ரீ குடும்பத்திற்கு திமுக மணமேல்குடி ஒன்றிய கழகம் சார்பில் 2 லட்சம் நிதியுதவி

புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மணமேல்குடி ஒன்றியம் மணலூர் கிராமத்தில் தொடர் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி சத்யஶ்ரீ சம்பவ இடத்திலேயே பலியானார். இறந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி மணமேல்குடி ஒன்றிய திமுக சார்பில் ரூபாய் 2 லட்சம்  நிதியுதவியை புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் திருமயம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ரகுபதி வழங்கினார். மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் பரணி கார்த்திகேயன்,  மணமேல்குடி ஒன்றிய செயலாளர் சக்தி இராமசாமி,  அறந்தாங்கி முன்னாள் நகர செயலாளர் இராஜேந்திரன், மஞ்சக்குடி வீரையா, மாணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கலைச்செல்வன்,  திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் விமலா, பிரபுராமன், நெப்போலியன், ஆகியோர் உடனிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments