கட்டுமாவடி மார்க்கெட்டில் மீன்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்.!புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இந்த பகுதியில் 15-க்கும் மேற்பட்ட மீன் ஏலக்கடைகள், இறால் கம்பெனிகள் செயல்படுகின்றன. 

இங்கு கட்டுமாவடி, மணமேல்குடி, பொன்னகரம், புதுக்குடி சேதுபாவாசத்திரம், மந்திரிப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும் ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள விசைப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. 

இந்த மீன்களை வாங்குவதற்காக மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் சரக்கு வாகனங்களில் வந்து செல்கின்றனர். ஞாயிறு, செவ்வாய், வியாழன் போன்ற நாட்களில் விசைப்படகு மீனவர்கள் கரை திரும்புவதால் மீன் வரத்து அதிகமாக இருக்கும். 

இந்தநிலையில், மாட்டுப்பொங்கல் கொண்டாடுபவர்கள் அதற்கு அடுத்த தினம் அசைவ உணவு சாப்பிடுவார்கள். இதனால், நேற்று கட்டுமாவடி மீன் மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மீன்களை வாங்குவதற்காகவே வியாபாரிகள் அதிகளவு வருகை தந்தனர். 

மேலும், உள்ளூரை சேர்ந்தவர்களும் வாங்க வந்திருந்தனர். இதனால், கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க கூட்டம் அலைமோதியது. ஒரு கட்டத்தில் அறந்தாங்கி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. 

இதனால் அறந்தாங்கி செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் தாமதமாகவே சென்றன. பொதுமக்கள் கூட்டம் காரணமாக மீன்கள் விலையும் உயர்ந்து காணப்பட்டது. கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments