சளி, இருமல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்: பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
சளி, இருமல் இருந்தால் மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதத்தில் மூடப்பட்டன. கரோனா தொற்றுப் பரவல் படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், கடந்த 19-ம் தேதி 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காகப் பள்ளிகள் திறக்கப்பட்டன.
தனிமனித் இடைவெளியைக் கடைப்பிடித்து வகுப்புக்கு 25 மாணவ, மாணவியரும், முகக்கவசம், தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலைப் பரிசோதனை உள்பட கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்தும் பள்ளிகள் இயங்க ஆரம்பித்துள்ளன. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே சேலம் மாவட்டம், பெரிய கிருஷ்ணாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் படித்து வரும் மாணவிக்கு நேற்று கரோனா தொற்று உறுதியானது.

இந்நிலையில், குழந்தைகளுக்கு சளி, இருமல், தலைவலி உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகளின் உடல் நலனில் முழுத் திருப்தியும் நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே பள்ளிக்கு அனுப்பலாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டால், மருத்துவர்களின் பரிந்துரைப்படி பள்ளிகளுக்கு வந்தால் போதுமானது எனவும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments