"Google Pay, PhonePe"போன்ற யுபிஐ பேமெண்ட் சில நாட்களுக்கு செயல்படாது..ஏன் தெரியுமா?




ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ  அதாவது யூனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ் -ஐ பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த சில நாட்களுக்கு மட்டும் சரியாக வேலை செய்யாது என தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI)  அதன் டிஜிட்டல் கட்டண தளத்தை மேம்படுத்துவதால் அடுத்த சில நாட்களுக்கு மட்டும் IST நேரப்படி காலை 1 மணி முதல் வரை 3 மணி வரை பரிவர்த்தனைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த மேம்படுத்துதலில் முக்கியமாக UPI கேட்வே வழியாக BHIM அல்லது மூன்றாம் தரப்பு பேமெண்ட் ஆப்களான கூகுள் பே, பேடிஎம் மற்றும் ஃபோன்பே வழியாக குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு இடையில் பரிவர்த்தனை செய்யும் யூசர்கள் சிரமத்தை சந்திக்க நேரிடும். இருப்பினும் இந்த மேம்படுத்தல் செயல்முறைக்கான சரியான நாட்களை NPCI குறிப்பிடவில்லை. இது "அடுத்த சில நாட்களுக்கு" இருக்கும் என்று கூறியுள்ளது. சிறந்த, பாதுகாப்பான அனுபவத்தை யூசர்களுக்கு வழங்க UPI தளத்தை மேம்படுத்துவதாக கூறியுள்ளது.NPCI அமைப்பு ஒரு ட்வீட் மூலம் இந்த தகவலை பகிர்ந்து கொண்டது. அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, "யுபிஐ பரிவர்த்தனைகளின் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த கட்டமைப்பை உருவாக்க, யுபிஐ இயங்குதளம் அடுத்த சில நாட்களுக்கு காலை 1 மணி முதல் 3 மணி வரை மேம்படுத்தும் செயல்பாட்டின் கீழ் இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளது. 

மேலும் NPCI வலைத்தளம் அனைத்து வகையான இணைய தாக்குதல்களுக்கும் எதிராக அதன் சொத்துக்கள் மற்றும் வலையமைப்பைப் பாதுகாக்க சில பாதுகாப்பு வழிமுறைகளை பயன்படுத்தியுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. இது உலகளவில் டேட்டா பிரைவசி மற்றும் பாதுகாப்பைச் சுற்றியுள்ள ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகளுக்கு ஏற்ப டேட்டா பாதுகாப்பு கொள்கையையும் இணைத்துள்ளது. இந்த பாதுகாப்பு கொள்கை கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments