அதிகபட்சம் ஏப்ரல் வரைதான்.. பழைய 5, 10, 100 ரூபாய் நோட்டுக்களை நிறுத்துகிறது ரிசர்வ் வங்கி!



            

    பழைய 100 ரூபாய் நோட்டுக்களை மார்ச் அல்லது ஏப்ரல் மாத இறுதிக்குள், முழுமையாக விலக்கிக் கொள்ள உள்ளதாக ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

                பண மதிப்பிழப்புக்கு பிறகு, 2019ம் ஆண்டு புதியவகை 100 ரூபாய் நோட்டு புது வண்ணத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த ரூபாய்தான் தற்போது சுற்றி வருகிறது.
 
ஊதா கலரில் பார்க்கவே புதுமையாக உள்ளதுதான் புதிய வகை 100 ரூபாய் நோட்டுக்களாகும். எனவே, பழைய வகை ரூபாய் நோட்டுக்களை புழக்கத்திலிருந்து அகற்ற, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பணப் புழக்கம்
            மாவட்ட வங்கிகள் இடையேயான ஆலோசனைக் கூட்டத்தில், மகேஷ் இதுபற்றி கூறுகையில், இந்த தகவலை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், மார்ச், ஏப்ரல் மாத இறுதிக்குள், 100 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திலிருந்து அகற்றப்படும். புதிய ரூபாய் நோட்டுக்கள், புழக்கத்தில் இருக்கும்.

10 ரூபாய் நாணயம்
10 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நோட்டுக்களும் புழக்கத்தில் இருந்து அகற்றப்படுகிறது. 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. ஆனால் அதை வணிகர்களும், பொது மக்களும் இன்னும் முழுமையாக ஏற்கவில்லை என்று தெரிகிறது.

விழிப்புணர்வு தேவை
10 ரூபாய் நாணயத்தை, தயக்கமின்றி, பயன்படுத்தலாம். இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மகேஷ் அறிவிக்கவில்லை. அவற்றை வாபஸ் பெறும் நடவடிக்கையில் ஆர்பிஐ ஈடுபடக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நினைப்பு\
தற்போது 10 ரூபாய் நாணயங்கள் டோல்கேட் போன்ற பகுதிகளில் தரப்படுகிறது, ஏற்கப்படுகிறது. வங்கிகளிலும் ஏற்கப்படுகிறது. ஆனால் வேறு எங்குமே 10 ரூபாய் நாணயங்களை வாங்க மக்கள் அச்சப்படுகிறார்கள். செல்லாத காசு என்று அவர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இது தவறாகும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments