கோட்டைப்பட்டினத்தில் காவலர் விழிப்புணர்வு உதவி மையத்தை தொடங்கி வைத்த திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.!கோட்டைப்பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஒவ்வொரு கிராமங்களிலும் காவலர் விழிப்புணர்வு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மையைத்தை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜெயராம் தொடங்கி வைத்து பேசுகையில், தங்கள் கிராமத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் காவலர் விழிப்புணர்வு உதவி மையத்தை தொடங்கி உள்ளோம். ஒவ்வொரு கிராமத்திற்கு ஒரு காவலர் நியமிக்கப்பட்டுள்ளார். உங்கள் கிராமத்தில் ஏதேனும் பிரச்சினை என்றால் நீங்கள் உடனே அவரை தொடர்பு கொள்ளவும். அவர் உங்கள் வீடுகளுக்கே வந்து உங்கள் பிரச்சினையை கேட்டறிவார். 

உங்கள் பகுதியில் கஞ்சா, சாராயம், போதை தரக்கூடிய பொருட்கள் உங்கள் பகுதிகளில் விற்பனை செய்தால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். அனைத்து மக்களும் சாதி, மத போதமின்றி ஒன்றுமையுடன் இருக்க வேண்டும் என்று கூறினார். 

இதில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெரினா பேகம், துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments