தடையை மீறி டிராக்டர் பேரணி நடத்தினால் நடவடிக்கை - புதுக்கோட்டை எஸ்.பி. எச்சரிக்கை
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் 61-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கும் விவசாய சங்க பிரதிநிதிகளும் இடையே 11 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அனைத்துக்கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது.இதற்கிடையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதி விவசாயிகள் சார்பில் டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி டெல்லியில் நடைபெற உள்ளது.

டெல்லியில் நடைபெற உள்ள டிராக்டர் பேரணிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்திலும் 26-ம் தேதி தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தடையை மீறி டிராக்டர் பேரணி நடத்தினால் மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments