பொதுத்தேர்வு: 10, 12-ம் வகுப்பு மாணவர்களின் பெயர்ப் பட்டியலைத் தயாரிக்க அரசு அனுமதி
பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் பெயர்ப் பட்டியலைத் தயாரிக்கப் பள்ளிக் கல்வித்துறைக்குத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிகளுக்குச் சென்று பெயர்ப் பட்டியலைத் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகளில் கூட்டம் சேராத வகையில் மாணவர்கள் மற்றும் பெற்றோரைத் தனித்தனியாக வரவழைத்து, பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களைச் சேகரிக்க வேண்டும். அப்போது தேர்வுக் கட்டணத்தை மாணவர்கள் செலுத்த வேண்டும். இந்தப் பணிகளின்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல், கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

கரோனா தொற்று காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டு ஜன.19-ம் தேதி திறக்கப்பட்டுள்ள நிலையில், பொதுத்தேர்வு தொடர்பாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் உறுதிமொழிப் படிவம் பெற வேண்டியுள்ளது. அதற்கும் அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments