அறந்தாங்கி பகுதியில் தொடர் மழையால் 8 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்..!




புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் தெற்கு வெள்ளாறு என்ற காட்டாறு உள்ளது. இந்த ஆற்றில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் தண்ணீர் ஓடும். இந்த ஆற்றில் கிடைக்கும் மணல் முதல் தரமான மணல்.  கிடைத்ததால் இந்த ஆற்றில் இருந்து அரசு மணல் குவாரி அமைத்து மணல் விற்பனை செய்தது. மேலும் பலரும் வெள்ளாற்றில் இருந்து சட்டவிரோதமாக விதிகளுக்கு புறம்பாக பல இடங்களில் மணலை அடிவரை சுரண்டி எடுத்ததால், ஆற்றுப்பகுதி முழுதும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதாலும், ஆற்றில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதாலும், கடந்த 8 ஆண்டுகளாக வெள்ளாறு தண்ணீரின்றி காணப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு தொடர்ந்து மழை பெய்து வருவதால், வெள்ளாற்றில் அறந்தாங்கி பகுதியில் வெள்ளாற்றில் தண்ணீர் தொடர்ந்து ஓடுகிறது.


கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளாற்றில் தண்ணீர் ஓடுவதால், அறந்தாங்கி நகரத்தில் ஏராளமான மக்கள் வெள்ளாற்று பாலத்திற்கு சென்று ஆற்றில் செல்லும் தண்ணீரை ரசித்து வருகின்றனர். வெள்ளாற்றில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் செல்வதால் அறந்தாங்கி நகரின் நீர்ஆதாரமாக விளங்கும் வெள்ளாற்றில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. 

மேலும் தற்போது வந்துள்ள தண்ணீரால் ஆற்றில் மணல் திருடும்போது ஏற்பட்ட பள்ளங்கள் அனைத்தையும் மணல் மூடியிருக்கும். இதனால் தொடர்ந்து ஆற்றில் மணல் வளமும் பெருகியுள்ளது. நிலத்தடி நீர்மட்டமும், மணல் வளமும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments