பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு மனு விசாரணை முகாம்..!
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 
முனைவர்.லோக.பாலாஜி சரவணன் அவர்களின் உத்தரவின் பேரில் 17.01.2021 ஆம் தேதி இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்கள் மற்றும் காவல் நிலையங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் காவல் அதிகாரிகள் சிறப்பு மனு விசாரணை முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து  பெரும்பாலான புகார் மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து உடனே துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இம்மனுவிசாரணை மூலம் பொதுமக்கள் மத்தியில்  புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினரின் செயல் காவல்துறை நண்பனாகவும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருப்பதாக பொதுமக்கள் தங்கள்  நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

என்றும் மக்கள் நலனிற்கும், பாதுகாப்பிற்கும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments