கோட்டைப்பட்டினம் பெரியபள்ளி வாசல் நுழைவாயில் கட்டிடத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்



கோட்டைப்பட்டினத்திற்கு நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் வருகை தந்தார். அவர் கோட்டைப்பட்டினம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ராவுத்தர் அப்பா தர்காவிற்கு சென்று வழிபாடு நடத்தினார். பின்னர் தர்கா நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

தொடர்ந்து அவர் கோட்டைப்பட்டினம் பெரியபள்ளி வாசல் நுழைவாயில் கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.பின்னர் கோட்டைப்பட்டினத்தில் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட உள்ள புதிய பஸ் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் கோட்டைப்பட்டினம் பகுதியில் புதிதாக 108 ஆம்புலன்ஸ் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments