கீரமங்கலம் அருகே உள்ள செரியலூர் இனாம் ஊராட்சி கரம்பக்காடு இனாம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி சிவயோகம் (வயது 65). நேற்று இவர் 100 நாள் வேலை திட்டத்தில் கரம்பக்காடு இனாம் கிராமத்தில் உள்ள ஆலாயக்குளம் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிேசாதித்தபோது, அவர் இறந்தது தெரியவந்தது. இதனிடையே மரணம் அடைந்த சிவயோகம் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் நிவாரண நிதி வழங்ககோரி அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையோரம் ஏராளமான சிவயோகத்தின் உறவினர்களும், பொதுமக்களும் திரண்டனர்.
தகவல் அறிந்த கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் முருகேசன், செரியலூர் கிராம நிர்வாக அலுவலர் அருள்வேந்தன், ஊராட்சி செயலர் இன்பஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு வந்த ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ மெய்யநாதன் பொதுமக்களின் கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரியிடம் செல்போனில் பேசினார்.
அப்போது, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். மேலும் முதல்-அமைச்சர் நிவாரணம் கிடைக்க வருவாய்துறை மூலம் கோப்புகள் தயாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனையடுத்து அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் அங்கிருந்து சென்றனர். இதனிடையே அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.