புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 2 அரசு பள்ளி மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு.. ஆசிரியர்கள், பெற்றோர்கள் மகிழ்ச்சி.!!புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 2 அரசு பள்ளி மாணவிகளுக்கு மருத்துவக்கல்லூரியில் பயில வாய்ப்பு கிடைத்துள்ளதால் அந்த மாணவிகளும் பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் 17 அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவம் படிக்க தேர்வாகி உள்ளனர். இதில் 11 பேர் அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் 6 மாணவ, மாணவிகள் தனியார் மருத்துவக்கல்லூரிகளிலும் சேர்ந்துள்ளனர். இதில் ஒரு மாணவி பல் மருத்துவம் படிப்பை தேர்வு செய்துள்ளார். முதல் நாள் கலந்தாய்வில் கலந்து கொண்டு அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் தனியார் கல்லூரியில் இடமிருந்தும் பணம் கட்ட முடியாது என்று இடம் தேர்வு செய்யாமல் சில மாணவ, மாணவிகள் வீடு திரும்பினார்.

அதன் பின் தனியார் கல்லூரிகளை தேர்வு செய்துள்ள மாணவர்களுக்கு திமுக தலைமை பணம் செலுத்தும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை தெடர்ந்து தமிழக அரசே பணம் செலுத்தும் என்று அறிவித்ததால் இந்த அறிவிப்பு முன்பே செய்திருந்தால் நாங்களும் தனியார் கல்லூரிகளில் மருத்துவ இடங்களை தேர்வு செய்திருப்போம் என்று தங்கள் வருத்தங்களை தெரிவித்திருந்தனர். பல மாணவர்கள் நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர்.

இந்நிலையில் 4ம் தேதி நடந்த இரண்டாவது கலந்தாய்வில் புதுக்கோட்டை மாவட்டம் மறமடக்கி அரசுப்பள்ளி மாணவி நித்யா கலந்து கொண்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் தேர்வு செய்துள்ளார். அதே போல சுப்பிரமணியபுரம் அரசுப்பள்ளி மாணவி நர்மதாவிற்கு தனியார் கல்லூரியில் பல் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 

இவர்களோடு சேர்த்து 17 அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவம் படிக்க செல்கிறார்கள். மறமடக்கி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி நித்யாவிற்கு தனியார் மருத்துவ கல்லூரியில் அரசின் இட ஒதுக்கீடு படி இடம் கிடைத்துள்ளதையடுத்து மாணவியை பள்ளி ஆசிரியர்களும் பெற்றோர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்ததோடு மாணவிக்கு இனிப்புகளை வழங்கி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments