சேமங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் உயிரிழப்புபுதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள முத்துக்குடா கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் யோகேஸ்வரன் (வயது 27). வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த இவர் விடுமுறையில் வந்து இருந்தார்.

இந்த நிலையில் இவர் கிழக்கு கடற்கரை சாலையில் சேமங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் வந்தபோது, எதிரே சிறுகடவாக்கோட்டை பகுதியை சேர்ந்த நாகேந்திரன் (50), தீயத்தூர் பகுதியை சேர்ந்த சக்தி (50) ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிளும் மோதியது. இந்த விபத்தில் சக்தி மற்றும் யோகேஸ்வரன் படுகாயம் அடைந்தனர். நாகேந்திரன் லேசான காயம் அடைந்தர்.

இதனையடுத்து 3 பேரும் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் சக்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.யோகேஸ்வரன் மேல் சிகிச்சைக்காக மதுரை ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்ப்படும்போது, வழியில் இறந்தார். 

இதுகுறித்து மீமிசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments