மீமிசல் அருகே மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு: நிவாரணம் வழங்க கோரிக்கை.!



மீமிசல் பகுதியில் தொடர் மழை காரணமாக உப்பளங்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி போனதால், அரசு நிவாரணம் வழங்க உப்பு உற்பத்தி தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே சுமார் 100 ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன. இதனை நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளன. இங்கு எடுக்கக்கூடிய உப்பு பல்வேறு மாநிலங்கள் மற்றும் வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் உப்பு எடுக்கும் தொழில் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட உப்பள தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments