ஆர்.புதுப்பட்டினத்தில் பயன்பாடு இல்லாத சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்ற கோரிக்கைமீமிசல் அருேக ஆர்.புதுப்பட்டினத்தில் பயன்பாடு இல்லாத ஆபத்தான பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டினம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்த பள்ளிக்கூடத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதில் மாணவர்கள் பயின்று வந்தனர்.அந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால் மாணவர்களின் நலன் கருதி தற்போது பயன்படுத்தாமல் இருந்து வருகிறது.

மேலும் அந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக பழுதடைந்து காணப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த கட்டித்தின் அருகே மற்றொரு கட்டிடம் உள்ளது. அங்கு மாணவர்கள் அமர்ந்து கல்வி கற்பார்கள். எனவே மாணவர்களின் நலன் கருதி பள்ளி திறப்பதற்குள் இந்த கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments