கோபாலப்பட்டிணம் வாக்காளர்கள் கவனத்திற்கு.!! 2021 வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா; எப்படி செக் பண்ணுவது.?



தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்கான வேலைகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையில் வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் வேலைகளில் ஈடுபட்டது. பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் ஆகியவற்றிற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டன. 

இந்த சூழலில் 2021-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு புதிய வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் இன்று (ஜனவரி 20) வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் இருக்கின்றனர்.

இதில் கோபாலப்பட்டிணத்தில் ஆண்கள் 1849 பேர். பெண்கள் 1918 பேர் என மொத்தம் 3767 வாக்காளர்கள் உள்ளனர்.

வார்டு வாரியாக PDF Link இணைக்கப்பட்டுள்ளது Download செய்து கொள்ளுங்கள்...

பாகம் 146- DOWNLOAD PART 146   GOOGLE DRIVE LINK

பாகம் 147- DOWNLOAD PART 147     GOOGLE DRIVE LINK

பாகம் 148- DOWNLOAD  PART 148    GOOGLE DRIVE LINK

பாகம் 149- DOWNLOAD PART 149     GOOGLE DRIVE LINK

இதுதொடர்பான மேலும் தகவல்களுக்கு தமிழக தேர்தல் ஆணையத்தின் elections.tn.gov.in மற்றும் https://electoralsearch.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைக் காணலாம். புதிதாக தங்கள் பெயர்களைச் சேர்க்க விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் பதிவு அதிகாரிகளிடம் படிவம் எண் 6ஐ சமர்பிக்க வேண்டும். இல்லையெனில் www.nvsp.in என்ற இணையதளத்தைக் காணலாம். கூகுள் ப்ளே ஸ்டோரில் Voter Helpline App என்ற மொபைல் ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments