நபிகள் நாயகத்தை இழிவு படுத்தும் வகையில் பேசிவரும் கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் நேற்று மாலை அண்ணாசிலை அருகில் மாவட்ட தலைவர் முபாரக்அலி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர் குலைக்கும் வகையில் முஸ்லிம்கள் மதிக்கும் நபிகள் நாயகத்தை தொடர்ந்து இழிவுப்படுத்தி பேசி வரும் கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
இதில் ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு சமூக நல்லிணக்கம் காக்கப்படவேண்டும், தமிழகம் அமைதி பூங்காவாக திகழ வேண்டும், கல்யாணராமன் போன்றவர்களை கண்டிக்கிறோம் என்ற கோஷங்களை எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் முகம்மது பாரூக் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments