இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் U. செய்யது அகமது தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் SAM.அரபாத் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் M.ஆவுடை சதாம் முன்னிலை வகித்தார்.இந்த கூட்டத்தில் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மணமேல்குடி நகர நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மணமேல்குடி நகரத் தலைவராக சுல்தான் ஆலிம், நகர செயலாளராக சாகுல் ஹமீது, நகர பொருளாளராக மஸ்தான் கனி ஆகியோர் நகர பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
1.கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
2.அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி தேர்தல் ஆலோசனை கூட்டம் எதிர்வரும் 13/2/2021 நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
3.கிருஷ்ணாஜிபட்டினம் ஊராட்சிமன்ற நிர்வாகத்தில் மக்களின் அடிப்படைத் தேவை குடிநீர், குப்பை, தெருவிளக்கு பூர்த்தி செய்யாமல் அலட்சியப் போக்கை கடை பிடிக்கும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தை SDPI கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இறுதியாக மாவட்ட பொதுச்செயலாளர் ஹனிபா நன்றியுரையாற்றினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments