கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி மீமிசலில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக போராட்டத்தில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறித்து இழிவாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாமியர்கள் நேற்று இரவு தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பேருந்து நிலையத்தில் கல்யாணராமனை கண்டித்து நேற்று (01-02-2021) மாலை கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. 
      
அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அனைத்து ஜமாஅத் சார்பாக நடைபெற்ற இந்த கண்டன ஆர்பாட்டத்தில், கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த யாசின் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த அன்வர் அவர்களும், R.புதுப்பட்டினத்தை சார்ந்த சேக் தாவூது அவர்களும், கோபாலப்பட்டிணம் இமாம் ஹாஜா அவர்களும், R.புதுப்பட்டினம் இமாம் கௌஸ் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். 
 
இப்போராட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமியர்கள், கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் கல்யாணராமனை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.
     
இறுதியில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த ரமலான் அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார். இக்கண்டன ஆர்பாட்டத்தில் ஆண்களும், பெண்களும் என 300-க்கும் மேற்பட்டோர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments