இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்தவர்கள் சவூதி அரேபியாவிற்குள் நுழைய தற்காலிக தடை!
சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை தடுக்கும் அடுத்த கட்ட நகர்வாக இந்தியா உள்ளிட்ட, 20 குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டினர் சவூதி அரேபியாவிற்கு நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை சவுதி பத்திரிகை நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பை மேற்கோள் காட்டி சவுதி கெசட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, சவுதிக்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ள நாடுகளின் பட்டியல் விவரம்:

அர்ஜென்டினா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, இந்தோனேசியா, அயர்லாந்து, இத்தாலி, பாகிஸ்தான், பிரேசில், போர்ச்சுகல், ஐக்கிய இராச்சியம், துருக்கி, தென்னாப்பிரிக்கா, சுவீடன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், லெபனான், எகிப்து, இந்தியா மற்றும் ஜப்பான்.

இந்த நடவடிக்கை,புதன்கிழமை பிப்ரவரி 3 ஆம் தேதி சவுதி அரேபிய நேரம் 9 மணி முதல் நடைமுறைக்கு வரும். கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான சவூதி அரேபியாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments