சமூக வலைதளங்களில் பொய்த் தகவல்களை பரப்பினால் நடவடிக்கை: புதுக்கோட்டை எஸ்.பி
 இரு வேறு சமூகங்களிடையே மோதலை உருவாக்கும் வகையில் பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சாதி, மத ரீதியாக இரு வேறு சமூகங்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி பிரச்சினைகளை உருவாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பொய்யான, தவறான, மிகைப்படுத்தப்பட்ட தகவலைப் பரப்புவது சட்டப்படி குற்றம்.இவ்வாறு தகவலைப் பரப்புவோர் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, வாட்ஸ்அப் குழு நிர்வாகி (அட்மின்) மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments