சென்னையில் நடைபெற்ற அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் கட்சிகள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
சென்னையில் தமிழக இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நேற்று பிப்ரவரி 2  இரவு நடைபெற்றது. இதில் கல்யாண ராமன் மற்றும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் உலக முஸ்லிம்களின் உயிரை விட மேலான இறை தூதர் அவர்கள் குறித்தும், இஸ்லாம் குறித்தும் அவதூறாக பேசுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது அதை முன் எடுக்க இன்று பிப்ரவரி 3 காலை இருந்து பணிகளை முன் எடுப்பது.

கல்யாண ராமன் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க அரசுக்கு அழுத்தம் கொடுப்பது.மற்றும் பல்வேறு முக்கிய விசயங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. களத்தில் போராடும் சொந்தங்கள் உடன் உலமாக்கள், சமூதாய தலைவர்கள் உறுதுணையாக நிற்போம், அனைத்து விதமான சட்ட நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்படும் என்பதை சமூதாய சொந்தங்களுக்கு தலைவர்கள் தெரிவித்து உள்ளனர். 

இந்த கூட்டத்தில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் பஷிர் அஹமது, மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் மன்சூர் காஷ்பி ஹஜரத், ஜமாத்துல் உலமா சபையின் முஜிபுர் ரஹ்மான் பாக்கவி ஹஜரத், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணை தலைவர் முஹம்மது முனீர், தமுமுக பொது செயலாளர் ஹாஜா கனி, பிஎப்ஐ தலைவர் இஸ்மாயில், எஸ்டிபிஐ பொது செயலாளர் அச உமர் பாருக்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்எல்ஏ அபூபக்கர், மஸ்ஜித்கள் கூட்டமைப்பு தலைவர் பஷிர் அஹமது, ஜமாஅத்தே இஸ்லாமி எஸ்.என் சிக்கந்தர், தர்வேஷ் ரஷாதி ஹஜரத் அவர்கள், தாருல் இஸ்லாம் ரஹ்மத்துல்லாஹ், இந்திய தேசிய லீக் குத்தூஸ், மனிதநேய ஜனநாயக கட்சி பொருளாளர் ஹாருண் ரஷித் மற்றும் தைமிய்யா, பிஎப்ஐ ரஜாக், கரிம் எஸ்டிபிஐ, ச ஷரியத் பாதுகாப்பு பேரவை சமியுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இப்படிக்கு 
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் 
மாநில ஊடக பிரிவு.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments