அறந்தாங்கி பஸ் நிலையத்தை விரிவுபடுத்த, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - ரத்தினசபாபதி: அறந்தாங்கி தொகுதி, அரிமளம் ஒன்றியம், இரும்பாநாடு வீரமாகாளியம்மன் கோவில் முன்பாக, சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும்.
அமைச்சர் வேலுமணி: அப்பகுதியிலிருந்து, 2 கிலோ மீட்டர் தொலைவில், சமுதாயக்கூடம் உள்ளது. எனவே, புதிதாக தேவையில்லை.
ரத்தினசபாபதி: அங்கு சமுதாயக்கூடம் அமைத்தால், மக்கள் ஆதரவு தருவர். வீரமாகாளியம்மன் அருள் கிடைக்கும். அறந்தாங்கி சந்தையை மீட்டு தர வேண்டும். பஸ் நிலையத்தை விரிவாக்க வேண்டும்.
அமைச்சர் வேலுமணி: பஸ் நிலையத்தை விரிவுபடுத்த, நடவடிக்கை எடுக்கப்படும். சந்தை தொடர்பாக, இரு ஊராட்சிகள் இடையே பிரச்னை உள்ளது; வருமானம் பாதிக்கப்படும் என்கின்றனர். இது தொடர்பாக, அதிகாரிகள் பேசி தீர்வு காண, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, விவாதம் நடந்தது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments