திருமயம் ஊராட்சியில் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க வாட்ஸ்-அப் குழு.! ஒரே ஆண்டில் இரண்டு விருதுகளை பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்.!!



திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர். இவர் திருமயம் ஊராட்சி குழு என்ற வாட்ஸ்-அப் குழு உருவாக்கி அதில் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களின் செல்போன் எண்களை இணைத்துள்ளார். 
இதில் திருமயம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிதண்ணீர் பிரச்சினை, தெருவிளக்கு பிரச்சினை, கழிவுநீர் வாய்க்கால் பிரச்சினை, சுகாதார சம்பந்தமான எந்த பிரச்சினையாக இருந்தாலும் அலுவலகத்துக்கு செல்லாமலேயே பொதுமக்கள் தங்களுடைய செல்போன் மூலம் வாட்ஸ்-அப் மூலம் பதிவு செய்து அனுப்புகின்றனர். 

அனுப்பியவுடன் சிறிது நேரத்தில் தகவலை பெற்றுக்கொண்டதாகவும், அதனை உடனே சரி செய்து கொடுப்பதாகவும் அவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் தெரிவித்து வருகிறார். 

மேலும் அந்த கோரிக்கையை அன்றைய தினமே நேராக சென்று பார்வையிட்டு பொதுமக்களுக்கு சரி செய்துகொடுத்து விடுவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று வருகிறார். மேலும் இந்த நடைமுறை கொரோனா ஊரடங்கின் போது மிகவும் பயனுள்ளதாக இருந்தது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணி செய்தற்காக சேவா ரத்னா விருதும், அசுத்தமாக கிடந்த சத்தியமூர்த்தி ஊரணியில் ஊர் பொதுமக்கள் ஒத்துழைப்போடு 5 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் தூய்மைப்படுத்தப்பட்டு நிலத்தடி நீரை சேமித்து வைத்தமைக்கு அகாடமி யூனிவெர்செல் குளோபல் பீஸ் சார்பில் டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டது. மேலும் 90 வருடங்களாக பராமரிப்பின்றி நடந்த சமாதான கிணறுகளை புனரமைப்பு பணி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து கொடுத்துள்ளார். ஒரே ஆண்டில் இரண்டு விருதுகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments