"புன்னகையை தேடி" என்ற திட்டதின் கீழ் குழந்தை தொழிலாளிகள், காணாமல் போன குழந்தைகள் மற்றும் பிச்சையெடுக்கும் குழந்தைகளை மீட்டு திறன்பட செயல்பட்டு வரும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன் அவர்களின் உத்தரவின்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணி்ப்பாளர் திரு. ராஜேந்திரன் அவர்கள் மேற்பார்வையில் புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.ரஷியா சுரேஷ் அவர்கள் மற்றும் காவலர்கள், DCP, CWC, Labour Department, Child Line & NGOS ஆகியோர்கள் இணைந்து Operation Smile (புன்னகையை தேடி) என்ற குழுவின் மூலமாக புதுக்கோட்டை, பொன்னமராவதி, அறந்தாங்கி, ஆலங்குடி ஆகிய இடங்களில் பேக்கரி, மெக்கானிக் கடை, மளிகை கடைகள் மற்றும் ஜவுளி கடைகளில் வேலை செய்து கொண்டிருந்த 25 சிறார்களை மீட்டு அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்து தக்க அறிவுரைகள் வழங்கினார்கள். மேலும் பிச்சையெடுத்து கொண்டிருந்த 2 சிறார்களை மீட்டு புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலரிடம் நல்ல முறையில் ஒப்படைத்தனர்.
என்றும் மக்கள் பாதுக்காப்பிற்காக
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments