புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் பேருந்து கட்டணம் திடீர் உயர்வு




புதுக்கோட்டை மாவட்டத்தில் பல தனியார் பஸ்களில் அரசு உத்தரவு இல்லாமல் திடீரென 5 ரூபாய் கட்டண உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டையிலிந்து, பட்டுக்கோட்டை, பேராவூரணி, கறம்பக்குடி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் சில தனியார் பஸ்களில் ஓரிரு நாட்களாக டீசல் விலை உயர்வை காரணம் காட்டி மறைமுகமாக அரசு அனுமதியின்றி 5 ரூபாய் கட்டணம் உயர்த்தி உள்ளனர். இதனால், அவ்வப்போது பஸ்களில் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கல்லூரி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து, இ.கம்யூ ஒன்றிய செயலாளர் சொர்ணகுமார் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தனியார் பஸ்களில் ஓரிரு நாட்களாக ஐந்து ரூபாய் கட்டணம் உயர்த்தி இருப்பது மக்களை கவலையடைய செய்திருக்கிறது.
இந்த கட்டண உயர்வு அரசு கவனத்திற்கு சென்றுள்ளதா அரசு ஆதரவோடு செயல்படுகிறதா, மறைமுக உத்தரவா என்கிற பல்வேறு சந்தேகங்களை மக்கள் மத்தியில் எழுப்பியிருக்கிறது. உடனடியாக தமிழக அரசு தலையிட்டு,
புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் பஸ் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் ஆங்காங்கே மறியல் போராட்டத்தை நடத்துவோம் என தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments