காவல்துறையினர் இடையே உள்ள அச்சத்தைப் போக்கும் விதமாக மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள்
காவல்துறையினர் இடையே உள்ள அச்சத்தைப் போக்கும் விதமாக மாவட்ட கூடுதல் காவல்  கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள் 

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி மையத்தில் 08.02.2021 இன்று புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.கீதா அவர்கள் மற்றும் புதுக்கோட்டை உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார் அவர்கள் கொரோனா  தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். 

தடுப்பூசி சுகாதாரத்துறை முழுவதும்  எடுத்துக்கொண்ட பின்னர், தற்போது  காவல்துறைக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களுக்கு இடையை  உள்ள அச்சத்தை உடைக்கும் விதமாக புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் துணைக் கண்காணிப்பாளர் அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட  தடுப்பூசி மையங்களில் காவல்துறையினர் தானாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

 கொரோனா இல்லாத நாளைய விடியலை நோக்கி.....
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments