புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய பேரிடர் கால ஒத்திகை




சென்னை அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 35 பேர் கொண்ட குழுவினர் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தினருடன் இணைந்து புதுக்கோட்டை நகர பகுதியில் உள்ள புதுகுளத்தில் பேரிடர் கால தற்செயல் ஒத்திகை நடத்தினர்.

 இதற்கு துணை கமாண்டோ ராஜன்பாலு தலைமை தாங்கினார். புதுக்கோட்டை நகரின் பெரிய குளமான புதுக்குளத்தில் 2 படகுகள் ஒன்றோடு ஒன்று எதிர்பாராத வகையில் மோதிக்கொண்டு படகில் பயணித்தவர்கள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தால் அவர்களை எவ்வாறு மீட்டு கரைக்கு கொண்டு வருவது. தண்ணீரில் மூழ்கி காணாமல் போனவர்களை எவ்வாறு தேடி அவர்களை மீட்பது, தண்ணீரில் விழுந்தர்களை மீட்ட உடன் எவ்வாறு அவர்களுக்கு முதலுதவி கொடுப்பது, உயிருக்கு ஆபத்தான அவர்களை உடனடியாக மருத்துவ உதவி கொடுத்து ஆம்புலன்ஸ் மூலம் எப்படி அனுப்பி வைப்பது. மேலும் பேரிடர் ஏற்பட்டால் எப்படி மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்திற்கும் தகவல் தெரிவிப்பது தகவல் வந்தவுடன் எவ்வாறு பேரிடர் மீட்பு படையினர் செயல்படுவார்கள் என்பதை தத்ரூபமாக செயல் விளக்கத்துடன் செய்து காண்பித்தனர். இதில் தேசிய மாணவர் படையினர், தீயணைப்பு துறையினர், மருத்துவத் துறையினர், வருவாய்த்துறையினர் பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டு செய்முறை விளக்கத்தை பார்வையிட்டு பயனடைந்தனர்.


 இதன்பின்னர் தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த துணை கமாண்டோ ராஜன்பாலு கூறுகையில், 2015-ம் ஆண்டு ஏற்பட்ட சென்னை வெள்ளமும், அதேபோன்று 2018-ல் ஏற்பட்ட கேரளா வெள்ளமும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு சவால் நிறைந்ததாக இருந்தது. ஆனால் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரிடர் ஏற்பட்டால் அது சவால் நிறைந்ததாக இருக்கும். ஆழ்துளை கிணறுகளில் குழந்தை சிக்கிக்கொண்டு பின்னர் மீட்பது என்பது சவால் நிறைந்ததாக உள்ளது என்றார். 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments