கலப்பு மருத்துவ முறையை எதிர்த்து இந்திய மருத்துவ சங்கம் அறந்தாங்கி கிளை மருத்துவர்கள் உண்ணாவிரதம்



புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி இந்திய மருத்துவ சங்கம் சார்பாக கலப்பு மருத்துவ முறையை எதிர்த்து உண்ணாவிரதம்  போராட்டம் இருந்தனர். 

இந்த உண்ணாவிரதம் போராட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் அறந்தாங்கி கிளை தலைவர் டாக்டர், ஜெ,லெட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். செயலாளர் டாக்டர் எஸ்.அருள்மணி, பொருளாளர் டாக்டர் சுந்தர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருத்துவர் லட்சுமி நாராயணன் 

பொதுமக்கள் மற்றும் அரசின் கவனத்திற்கு எடுத்து சொல்வதற்காக இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றோம். சித்தா, ஆயூர்வேதம், யுனானி, அலோபதி தனித்தனி மருத்துவ முறை இருக்கிறது. 

அவர் அவர்கள் தனித்தனியாக மருத்துவ பயிற்சி எடுத்து மருத்துவம் பார்க்கின்றனர். 

இந்நிலையில் ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மருத்துவம் பார்க்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டது.

 எம்பிபிஎஸ் படித்த மருத்துவர்கள் அறுவை  சிகிச்சைக்கு என்று 3 வருடம் பயிற்சி  எடுத்து மருத்துவம் பார்க்கின்றனர். ஆதலால் ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்வது பொது மக்களுக்கு ஆபத்தானது. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் போராட்டம் நடத்துகிறோம் என்று கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments