கோட்டைப்பட்டினத்தில் பாலியல் வன்கொடுமை சம்மதமாக புகார் அளிப்பது எவ்வாறு என்ற விழிப்புணர்வு பதாகை அமைக்க அழைப்பு.!தமிழகத்தில் நமக்கு மிகவும் அருகாமையிலே சிறுமியர்கள் பாலியல் பலாத்கார வன்கொடுமை சம்பவங்கள் தற்ப்பொழுது தலை விரித்தாடத் தொடங்கியுள்ளது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் அந்த சிறுமியர்களின் குடும்பாத்தார் யாரிடம் அந்த புகார்களை எடுத்து செல்ல வேண்டும், எந்த சேவை மையத்திற்கு அந்த புகார்களை எடுத்து சென்றால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும், அந்த புகார் சேவை மையத்தினுடைய புகார் நடவடிக்கைகள் என்னவெல்லாம் என்பதை அறியப்பெறும் விழிப்புணர்வு பதாகை அமைக்கும் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய 13.02.2021 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் கோட்டைப்பட்டிணம் செக் போஸ்ட் அருகாமையில் நடைபெற உள்ளது.

ஆகவே இந்த நிகழ்ச்சியில் கோட்டைப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதி அனைத்து சமுதாய சொந்தங்களும் தவறாது கலந்துக்கொண்டு, நிகழ்ச்சியினை சிறப்பித்து தருமாறு உங்களை அன்போடு வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறோம்.

இப்படிக்கு…
வெளிநாடு வாழ் கோட்டைப்பட்டிணம் முஸ்லிம் சகோதரர்கள் சங்கம் மற்றும் KPM உதவும் கரங்கள் வாட்ஸப் மக்கள் சேவை குழுமம்,கோட்டைப்பட்டிணம்.

தகவல்: அஜிமீர் கான்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments