கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து புதுக்கோட்டையில் அகில இந்திய கட்டுனர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.!



அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கம் மற்றும் அகில இந்திய பொறியியல் ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் தளவாடப் பொருட்கள் விலை உயர்வை கண்டித்து புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய கட்டுனர் சங்க முன்னாள் மாநில தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். மைய தலைவர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். புதுக்கோட்டை மாவட்ட கட்டிட பொறியாளர் சங்க மாவட்ட தலைவர் கருணாநிதி, முருகேசன், சேட் உடனடி தலைவர் ரமேஷ் குமார், ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

கொரோனா பாதிப்பு காலத்திற்கு முன்பு ரூ.300-க்கு விற்ற சிமெண்டு தற்போது ரூ.420 முதல் ரு.430 வரைக்கும் விற்கிறது. அதேபோல் கடந்த 2 மாதத்திற்குள் உள்ளாக ஸ்டீல் கம்பிகளின் விலை கிலோ ரூ.45 இருந்து ரு.70 ஆகவும், பிளாஸ்டிக் பைப்புகளின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. எலக்ட்ரிக்கல் பொருட்களின் விலை 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments