அறந்தாங்கியில் சாலையில் சுற்றித்திரிந்த 70 மாடுகள் பிடிக்கப்பட்டன.. உரிமையாளா்களுக்கு அபராதம்.!அறந்தாங்கி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட சாலைகளில் கால்நடைகள் அதிகளவு சுற்றித் திரிவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில், நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அலுவலர் சேகர் ஆகியோர் மேற்பார்வையில், நகராட்சி பணியாளர்கள் சாலையில் சுற்றித்திரிந்த 70 மாடுகளை பிடித்து அறந்தாங்கி பூங்கா இடத்தில் அடைத்தனர். போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்ததாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

மாடு வேண்டும் என்றால் பெரிய மாட்டிற்கு ரூ.2 ஆயிரமும், கன்றுக்குட்டிக்கு ரூ.500-ம் அதன் உரிமையாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் அபராதம் செலுத்தி விட்டு அதனை ஓட்டிச்சென்று வீட்டில் பாதுகாப்பாக வளர்க்குமாறு நகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments