திருவரங்குளத்தில் வீட்டுமனைப்பட்டா வழங்க கோரி கிராம மக்கள் மனு.!திருவரங்குளம் கே.வி.எஸ்.நகர் பகுதியில் ஏழை, எளிய விவசாய கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் இவர்கள் வீட்டுக்கு வீட்டு வரி கட்டி வருகின்றனர். மேலும் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் இணைப்பும் பெற்றுள்ளனர். 

ஆனால் பட்டா வழங்கப்படாமல் உள்ளது. பலமுறை பட்டா வழங்க கோரி மனு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இந்தநிலையில் ஆரம்ப சுகாதாரநிலைய கட்டிட திறப்பு விழாவுக்கு வந்த அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மனு அளித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments