SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி 2021 தேர்தல் ஆலோசனைக் கூட்டம்



அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் கோட்டைபட்டினம் நேற்று 13/2/2021 நிஷா மஹாலில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் U.செய்யது அகமது அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் SAM அராபத் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக கட்சியின் மாநில பொது செயலாளர் M.நிஜாம் முகைதீன் மற்றும் மாநில செயலாளர் A.அபூபக்கர் சித்தீக் அவர்கள் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் M.ஆவுடை சதாம், PMS.குலாம் மற்றும் மாவட்ட பொருளாளர் S.சாலிஹ் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் நகர நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் செயல்வீரர்கள், கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments