பாலக்குடியில் கடற்கரை பாதையில் உள்ள தனி நபர் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி வருகிற பிப்.23 சாலை மறியல்.! கிராம மக்கள் அறிவிப்பு.!!பாலக்குடியில் கடற்கரை பாதையில் உள்ள தனி நபர் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி வருகிற 23.02.2021 அன்று கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா, பாலக்குடி கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த கடற்கரை பாதையில் உள்ள தனி நபர் ஆக்கிரமிப்பை அகற்றி தர வேண்டி அதிகாரியிடம் பலமுறை முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் ஆக்கிரமிப்பை அகற்றி தராத மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசை கண்டித்து வருகிற 23.02.2021 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் பாலக்குடி பழைய செக்போஸ்ட் கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

அழைப்பது - பாலக்குடி கிராம பொதுமக்கள்
93440 88112, 86750 11385, 93455 61089, 86758 65543 

தகவல்: பெலிக்ஸ் ராஜ், பாலக்குடி

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments