மயக்கம் அடைந்த முதியவர் பஸ்சில் இருந்து இறக்கி விடப்பட்ட அவலம்
ஆலங்குடி பஸ் நிலையத்தில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற அரசு பஸ்சில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஏறினார். அவர், திடீரென மயக்கம் அடைந்தார். அதனால், அந்த முதியவர் பஸ்சில் இருந்து இறக்கி விடப்பட்டார். பின்னர், அங்கிருந்த பயணிகள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து அதில் அவரை ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு பஸ்சில் மயங்கிய முதியவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்காமல் அவரை கீழே இறக்கி விடப்பட்ட சம்பவம் சக பயணிகளிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கேட்டுக்கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments