புதுக்கோட்டை மாவட்டத்தில் 8 இடங்களில் அம்மா மினி கிளினிக்




கிராமப்புற மக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்கச் செய்யும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத பகுதிகளில் அம்மா மினி கிளினிக் தொடங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நல்லூரில் அம்மா மினி கிளினிக் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மினி கிளினிக்கில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு, சளி பரிசோதனை போன்ற பல்வேறு பரிசோதனைகளும், சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையும், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் முதியோருக்கு சிகிச்சைகள் மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும்.

 இதேபோன்று பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், நல்லூர் ஒலியமங்கலம், ஆலவயல், வார்பட்டு, திருமயம் ஊராட்சி ஒன்றியம், குழிபிறை, லெம்பலக்குடி, அரிமளம் ஊராட்சி ஒன்றியம், மேல்நிலைப்பட்டி, கல்லூர் ஆகிய கிராமங்களிலும் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments