அறந்தாங்கி முதல் திருச்சி வரை குளிர்சாதன வசதியுடன் கூடிய பஸ் இயக்கம்




அறந்தாங்கியில் இருந்து திருச்சிக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் அறந்தாங்கியில் இருந்து குளிர்சாதன வசதியுடன் கூடிய பஸ் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நேற்று காலை  முதல் அந்த பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ் தினமும் அறந்தாங்கியில் இருந்து காலை 6.05 மணி, மதியம் 12.05 மணி, மாலை 5.30 மணிக்கும் புறப்பட்டு திருச்சிக்கு செல்லும். இதேபோல் திருச்சியில் இருந்து 9.05 மணிக்கும்,  மதியம் 3.05 மணிக்கும், இரவு 8.12 மணிக்கும் புறப்பட்டு அறந்தாங்கிக்கு வருகிறது. இந்த பஸ் இயக்கப்பட்டதற்கு அறந்தாங்கி பகுதி மக்கள் பயணிகளுக்கு இனிப்பு கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பணிமனை மேலாளர் முத்துராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த பஸ்சில் புதுக்கோட்டைக்கு ரூ.40-ம், திருச்சிக்கு ரூ.100-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments