ஊர்க்காவல் படை வட்டார துணை தளபதி பணியிடத்துக்கு பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு.!!புதுக்கோட்டை மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள வட்டார துணை தளபதி பணியிடத்திற்கு புதிதாக ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது.

இதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் 35 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். தனியார் நிறுவன தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், விரைவுரையாளர்கள் போன்றோர் விண்ணப்பிக்கலாம். 

புதுக்கோட்டை மாவட்ட எல்லைக்குள் குடியிருப்பவராக இருக்க வேண்டும். பொதுநல சேவை தன்னார்வ தொண்டு செய்யவிருப்பமுள்ளவராக இருக்கவேண்டும். இது ஒரு கவுரவப் பதவி என்பதால் ஊதியம் ஏதும் வழங்கப்படமாட்டாது. 

இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பப்படிவத்தினை புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். 

பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பிறப்பு சான்றிதழ், கல்வித்தகுதிக்கான சான்றிதழ், அரசு மருத்துவரிடம் பெறப்பட்ட மருத்துவ சான்றிதழ், 2 புகைப்படம் மற்றும் சுயவிபர ஆவணங்கள் ஆகியவற்றுடன் வருகிற 27-ந் தேதிக்குள் ஊர்க்காவல் படை அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும். மேற்கண்ட தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments