ஜெகதாப்பட்டினம் அருகே பிப்.16 அன்று மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சிவஜோதி (வயது 22). இவர் கடந்த 16-ந்தேதி மோட்டார் சைக்கிளில் கடற்கரை சாலையில் கோட்டைப்பட்டினத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது யாகூப்ஹசன்பேட்டை அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற நூர்முகம்மது (30) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினார். 

இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிவஜோதி மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஜெகதாப்பட்டினம் போலீசார் வழக்குபதிவு செய்து விசரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments