பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து அறந்தாங்கியில் திமுகவினர் சைக்கிள் பேரணிபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து பல்வேறு கட்சி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்து இன்று அறந்தாங்கி செக்போஸ்டில் முன்னாள் அமைச்சர் ரகுபதி தலைமையில் 200 மேற்பட்ட திமுகவினர் சைக்கிள் பேரணி நடத்தினர்.

சைக்கிள் பேரணி அறந்தாங்கி செக்போஸ்டில் தொடங்கி பெரிய கடைவீதி அரசு மருத்துவமனை பேருந்து நிலையம் என முக்கிய வீதிகள் வழியாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்தும் திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன முழக்கத்துடன் திமுகவினர் சைக்கிளை ஓட்டிச் சென்றனர். 

இதில் மாநில தேர்தல் பணிக்குழு செயலாளரும் மணமேல்குடி ஒன்றிய பெருந்தலைவர் பரணி இ.ஏ.கார்த்திகேயன் அவர்கள், மாவட்ட அவைத்தலைவர் பொன்துரைஅவர்கள், மாவட்ட துணை செயலாளர் சீனி.பழனியப்பன், அறந்தாங்கி நகர செயலாளர் ஆனந்த் அறந்தாங்கி தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்.கணேசன் மணமேல்குடி ஒன்றிய துணை பெருந்தலைவர் எஸ்.எம்.சீனியர், முன்னாள் நகர கழக செயலாளர் இராஜேந்திரன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பா.வெங்கடேசன் மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் தி.முத்து, மாவட்டஇளைஞரணி அமைப்பாளர் மணிராஜன், துணை அமைப்பாளர் உதயம் சரண், பாரதிராஜா, தமிழ்ராசு,மகளிர் தொண்டர் அணி பாத்திமா பீவி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ஹரி.விமலாதி, நகர தகவல் தொழில்நுட்ப அணிஒருங்கிணைப்பாளர் திரு.விவேக் ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், மாவட்ட அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கலந்துக்கொண்டார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments