பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து அறந்தாங்கியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்.!பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து புதுக்கோட்டையில் தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்ததோடு, தற்போது சமையல் கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிற நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி அறந்தாங்கி அண்ணா சிலை அருகே தி.மு.க.சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளர் ரகுபதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல்-டீசல் உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. இதில் மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் பரணிகார்த்திகேயன், ஆவுடையார்கோவில் ஒன்றிய செயலாளர் உதயசண்முகம் உள்பட தி.மு.க.வினர் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments