புதுக்குடி பகுதியில் 4 கிலோ கடல் குதிரைகள் பறிமுதல்கோட்டைப்பட்டினம் அருகே புதுக்குடி பகுதியில் 4 கிலோ கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோட்டைப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தெற்கு புதுக்குடி பகுதியில் ஒருவர் சாக்கு மூட்டையுடன் நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை அழைத்த போது, அவர் அங்கு இருந்து ஓடினார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை விரட்டி சென்று பிடித்தனர். பின்னர் அவர் வைத்திருந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்த போது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள கடல் குதிரைகள் இருந்தன. அவைகள் 4 கிலோ எடை கொண்டதாக இருந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் கீரனூர் பகுதியை சேர்ந்த குருசாமி (வயது 38) என தெரியவந்தது. பின்னர் அவரிடம் இருந்த கடல் குதிரைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கடல் குதிரைகளையும், குருசாமியையும் அறந்தாங்கி வனசரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments