மீமிசல் அஞ்சல்துறை நடத்தும் ஆதார் பதிவு, திருத்தம் செய்ய சிறப்பு சேவை முகாம்!!இந்திய அஞ்சல் துறை நடத்தும் ஆதார் சிறப்பு முகாம் மீமிசல் அஞ்சலகத்தில் நேற்று 22.02.2021 முதல் துவங்கி வருகிற 27.02.2021 வரை ஆறு நாட்கள் நடக்கிறது.

இந்த முகாமில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, புதிதாக ஆதார் அட்டை எடுத்தல் மற்றும் முகவரி மாற்றம், பிறந்த தேதியில் திருத்தம், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி சேர்த்தல் போன்ற வசதிகளை பெற்றுக்கொள்ளலாம். புதிய ஆதார் அட்டை எடுக்க கட்டணம் இல்லை. 

ஐந்து வயது, 15 வயது முடிந்து, கைரேகை, கண் கருவிழிகளை புதிதாக பதிவு செய்பவர்கள், கட்டணம் செலுத்த வேண்டாம். மற்ற வயதினர், நூறு ரூபாய் செலுத்த வேண்டும். இதர சேவைகளுக்கு, 50 ரூபாய் செலுத்த வேண்டும். இவ்வாறு அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

இந்த அரிய வாய்ப்பை கோபாலப்பட்டிணம், மீமிசல், ஏம்பக்கோட்டை, R.புதுப்பட்டிணம், அரசநகரிப்பட்டினம், பொன்னமங்கலம், பாதரக்குடி, முத்துக்குடா, பொய்யாதநல்லூர், கிழஏம்பல், செய்யானம், குமரப்பன்வயல் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு GPM மீடியா சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு

சம்பந்தப்பட்டவர்கள் நேரடியா செல்லவும்.

முகவரி மாற்றத்திற்கு தேவையான ஆவணங்கள் ஏதாவது ஒன்று பாஸ்போர்ட், ரேஷன் கார்டு அட்டை, வாக்காளர் அட்டை , ஓட்டுனர் உரிமம்,

சமையல் எரிவாயு ரசீது, வங்கி புத்தகம், ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

5-வயது குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுக்கலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments