மே 15-ம் தேதி பிறகு வாட்ஸ்அப் நிலை என்ன? புதிய நிபந்தனையை ஏற்காவிட்டால் என்னவாகும்?
வாட்ஸ்அப் நிறுவனம் யூசர்களின் தனியுரிமையில் மாற்றம் செய்வதாக அறிவித்ததும் பல யூசர்கள் மற்ற ஆப்ஸ்களைப் பயன்படுத்த தொடங்கினர். யூசர்கள் பலர் மாற ஆரம்பித்ததும், வாட்ஸ்அப் திருத்தப்பட்ட தனியுரிமை கொள்கையை நடைமுறைப்படுத்துவதைத் தள்ளிவைத்தது. யூசர்களின் தரவுகளை ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அளிக்க இருப்பதாகவும், வணிக நிறுவனங்களுடன் பகிர இருப்பதாகவும் செய்தி பரவியதையடுத்து பல யூசர்கள் டெலிகிராம், சிக்னல் போன்ற மாற்றுச் ஆப்ஸ்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். நீண்ட நாட்களாக பலரும் பயன்படுத்தி வரும் இந்த வாட்ஸ்அப்பில் இதுபோன்ற ஒன்றை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதனால் யூசர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது, இதனையடுத்து புதிய வாட்ஸ்அப் பாலிசியின் காலக்கெடு மே 15 வரை நீட்டிக்கப்பட்டது.

வாட்ஸ்அப்பின் புதிய நிபந்தனையை ஏற்காவிட்டால் என்னாகும்?

ஜனவரி 5ம் தேதி, WhatsApp ஒரு புதிய தனியுரிமைக் கொள்கையை வெளியிட்டபோது, அனைவரும் அதைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும், நீங்கள் புதிய விதிகளை ஏற்கவில்லை என்றால், வாட்ஸ்அப்பை இயக்க முடியாது என்பதை நிறுவனம் தெளிவுப்படுத்தியது. ஆனால் இந்த முறை வாட்ஸ்அப்பின் குறிப்புகள் மாறிவிட்டன. WhatsApp Business-யின் புதிய தனியுரிமைக் கொள்கையைப் பின்பற்ற எந்த அழுத்தமும் இல்லை என்று நிறுவனம் கூறியுள்ளது. நிபந்தனைகளை ஏற்காமல் நீங்கள் அதைப் பயன்படுத்த முடியும். ஆனால் முன்பு செய்தவற்றை இப்போது செய்யமுடியாது. சில அம்சங்கள் தான் உங்களுக்கு கிடைக்கும்.இது தொடர்பாக, யூசர்கள் வாய்ஸ் கால்கள் மற்றும் அறிவிப்புகளைப் பெற முடியும் என்றாலும், அவர்கள் ஆப்ஸிலிருந்து எந்த செய்திகளையும் படிக்கவோ அனுப்பவோ முடியாது என்று TechCrunchன் அறிக்கை கூறுகிறது. இதுவும் “ஒரு குறுகிய காலத்திற்கு” இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கையை யூசர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் யூசரின் கணக்குகள் குறுகிய காலம் அல்லது சில வாரங்களுக்கு மட்டும் நீக்கப்படும்.

நிறுவனத்தின் FAQ பக்கத்தில், வாட்ஸ்அப் தெளிவாக குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் , “வாட்ஸ்அப்பில் இப்போது கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களை நீங்கள் நிதானமாக படித்து மதிப்பாய்வு செய்ய உங்களுக்கு போதுமான நேரத்தை நாங்கள் வழங்குகிறோம். அதற்கான இறுதி நாளாக மே 15 நாங்கள் நிர்ணயித்துள்ளோம். எங்கள் நிபந்தனையை நீங்கள் ஏற்கவில்லை என்றால், வாட்ஸ்அப் உங்கள் கணக்கை நீக்காது. இருப்பினும், நீங்கள் ஏற்றுக்கொள்ளும் வரை வாட்ஸ்அப்பின் முழு செயல்பாடு உங்களிடம் இருக்காது. குறுகிய காலத்திற்கு, நீங்கள் அழைப்புகள் மற்றும் அறிவிப்புகளைப் பெற முடியும், ஆனால் பயன்பாட்டிலிருந்து செய்திகளைப் படிக்கவோ அனுப்பவோ முடியாது என குறிப்பிட்டுள்ளது.

மே 15க்குப் பிறகு என்ன நடக்கும் தெரியுமா?மே 15க்குப் பிறகும் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கையை யூசர்கள் ஏற்கலாம். இருப்பினும், இது ஒரு எச்சரிக்கையுடன் வருகிறது. செயலற்ற யூசர்கள் தொடர்பான அதன் கொள்கை மே 15 க்குப் பிறகு பொருந்தும் என்று வாட்ஸ்அப் கூறுகிறது. “பாதுகாப்பைப் பேணுவதற்கும், தரவு வைத்திருப்பதைக் கட்டுப்படுத்துவதற்கும், எங்கள் யூசர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கும், வாட்ஸ்அப் கணக்குகள் பொதுவாக 120 நாட்கள் செயலற்ற நிலைக்குப் பிறகு நீக்கப்படும்” என்று வாட்ஸ்அப்பின் செயலற்ற கணக்குக் கொள்கை (WhatsApp’s inactive accounts policy) குறிப்பிடுகிறது. எனவே ஒரு யூசர் வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கையை ஏற்கவில்லை என்றால், மே 15லிருந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு அதாவது செப்டம்பர் மாதத்தில் அதாவது ஒரு தேதியில் யூசரின் கணக்கு நீக்கப்படும். இது சம்மந்தமாக வேறு ஒரு செய்தியும் வரலாம்.

தொழில்நுட்பம் எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகிறது அவ்வளவு வேகமாக மக்களின் தனி உரிமையும் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரின் தனி உரிமை அவர்களின் உயிர் போன்று பாதுகாக்க வேண்டும். ஆனால் இப்போதுள்ள டிஜிட்டல் முறைகளால் ஒரு நிறுவனம் தன்னிடம் இருக்கும் யூசர்களின் தரவுகளை பிற நிறுவனங்களுடன் பரிமாறிக்கொள்கிறது. தனி உரிமைகள் மீறப்பட்டால் விளைவு பயங்கரமாக இருக்கும் என்பதால் தான் இப்போது வாட்ஸ்அப்பின் தனியுரிமை கொள்கை குறித்து உலகமே அதிருப்தியில் உள்ளது. பின்வரும் நாட்களில் இது குறித்த முக்கிய செய்தி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments