தமிழ்நாட்டின் கடன் சுமையை ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்த்தியதே அரசின் சாதனை: நவாஸ் கனி எம்.பி பேட்டி
‘‘தமிழக கடன் சுமையை ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்த்தியதே அரசின் சாதனை’’ என ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    முதல்வர் பழனிசாமி 4 ஆண்டுகள் ஏதும் செய்யாமல் இருந்துவிட்டு, தேர்தலை முன்னிட்டு தமிழக முழுவதும் சுற்றுபயணம் செய்து வருகிறார். பட்ஜெட்டில் தேர்தலுக்காக அறிவிக்கப்பட்ட கவர்ச்சிகரமான திட்டங்களை செயல்படுத்த மாட்டார்கள்.

மு.க.ஸ்டாலின் திமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும் என்று சொன்னார். ஆனால் தற்போதைய சூழ்நிலையை பார்த்தால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

எங்களது கூட்டணியில் எந்தக் கட்சியை சேர்க்க வேண்டும், சேர்க்கக் கூடாது என்பதை கட்சித் தலைமை தான் முடிவு செய்யும். எங்கள் கூட்டணிக்கு கமல் வந்தால் வரவேற்போம்.

காரைக்குடி பகுதியில் 270 ஏக்கர் வக்புவாரிய நிலம் ஆக்கிமிரப்பில் உள்ளதாக கூறுகின்றனர். அந்த சொத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தமிழகம் முழுவதும் வக்ஃபுவாரிய சொத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். காலி நிலங்களில் சமூகத்திற்கு பயன்படும் வகையில் கல்வி நிலையங்கள், திருமண மண்டபங்கள் கட்ட திட்டம் உள்ளது.

பாஜக, அதிமுகவை அடிமைப்படுத்தி வைத்துள்ளது. அவர்களால் மத்திய அரசை துளிகூட எதிர்க்க முடியவில்லை. மத்திய அரசு அதிகாரத்தை பயன்படுத்தி தங்கள் மீது வழக்கு பதிந்துவிடுவோம் என்ற அச்சத்தில் பாஜக சொல்லும் தமிழர் விரோத திட்டங்கள் அனைத்தையும் அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது.

மத்திய அரசு நினைப்பதை பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்துகிறார்களோ, இல்லையோ தமிழகத்தில் செயல்படுத்திவிடுகிறார்கள்.

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை அடைந்தது. அதேபோல் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி வைத்தால் மீண்டும் தோல்வி அடைவோம் எனத் தெரிந்தும் தங்களை காப்பாற்றி கொள்ள பாஜகவுடன் அதிமுக தலைவர்கள் கூட்டணி வைத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments