திருச்சி விமான நிலையம் அருகே, காவேரி நகர் பகுதியில் உள்ள காலி மனை ஒன்றில் இன்று காலை 7 மணி அளவில், குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அவ்வழியே சென்றவர்கள் உடனடியாகக் காவல் துறைக்கு இதுகுறித்து தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த போலீஸார், ஒரு சாக்குப் பையிலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்பதைக் கண்டறிந்தனர். அதைத்தொடர்ந்து சாக்குப் பையைப் பிரித்துப் பார்த்த போது அதில் ஏழு மாத குறைப்பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து உடனடியாக குழந்தையை மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின் அங்கிருந்த அரசு மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து விமானநிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக அரசு மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிருடன் நல்ல ஆரோக்கியத்தில் இருக்கும் பெண் குழந்தையைச் சாக்குப்பையில் கட்டி காலி மனையில் வீசிச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குழந்தையை காலி மனையில் வீசியவர்கள் யார் என்றும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments