பெண்ணின் கைப்பையில் இருந்த 19 பவுன் நகைகள் திருட்டு
அறந்தாங்கி அடுத்த பேரானனூர் கிராமத்தை சேர்ந்தவர் சோலைகருப்பையா. இவரது மனைவி பிரியங்கா (வயது 23). இவர் நேற்று குளவாய்பட்டி அருகே உள்ள கத்தகுறிச்சியில் உள்ள அவரது சின்ன மாமியாரான செல்வி வீட்டிற்கு சென்று விட்டு, குளவாய்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து அறந்தாங்கி வழியாக மீமிசல் செல்லும் அரசு பஸ்சில் பிரியங்கா, செல்வி, நாத்தனார் ஆஷா ஆகிய மூன்று பேரும் அறந்தாங்கி வந்து உள்ளனர். 

அறந்தாங்கி பஸ் நிலையம் வந்ததும் பஸ்சை விட்டு கீழே இறங்கிய கையில் இருந்த கை பையை பிரியங்கா பார்த்த போது பை திறந்த நிலையில் இருந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 
19 பவுன் நகைகள் திருட்டு 
பின்னர் பையை பார்த்தபோது அதில் வைத்திருந்த நகை பெட்டி காணாமல் பேனது தெரியவந்தது. அதில் 3 பவுன் நெக்லஸ், மாங்கா காசு 7 பவுன், டாலர் செயின் 6 பவுன், செயின் 2 பவுன், மோதிரம் 1 பவுன் மொத்தம் 19 பவுன் தங்க நகைகளை பஸ்சில் பயணம் செய்த போது, மர்ம நபர் திருடி சென்று விட்டது தெரியவந்தது. 
இதுகுறித்து பிரியங்கா அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments